வியாழன், 2 ஜூலை 2009 (12:42 IST)
உப்பு தேவையான அளவு என்று பொதுவாக சமையல் குறிப்புகளில் போடுவோம். அது என்ன தேவையான அளவு என்று பலருக்கும் தெரிவதில்லை.
உப்பு இல்லாவிட்டால் உணவே ருசிக்காது என்பது முக்கியம். ஆனால் அதிகமான உப்பை சாப்பிட்டுவிட்டால் நமது உடல் நலம் ருசிக்காமல் போய்விடும் ஆபத்து உள்ளது. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிகமான உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளும் நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
பெரும்பாலான மருத்துவ ஆய்வுகள், அதிக உப்பு கொண்ட உணவுகைள தவிர்ப்பதுதான் நல்லது என்று உறுதியாகக் கூறியுள்ளன.
உப்பை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் வலிப்பு நோய் ஏற்படும் என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே தேவையான அளவிற்கு சற்று குறைச்சலாகவே உப்பை சாப்பிட்டால் ருசியாக வாழலாம்.