புகை, மது, போதைப் பொருள் உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
மன அழுத்தம், மனத் தொய்வு, தாழ்வு மனப்பான்மை, உற்சாகமின்மையைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இயற்கையான உணவுகளை உண்ண வேண்டும். செயற்கை உணவுகள், பாஸ்ட் புட், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களை தொடவே வேண்டாம்.
சர்க்கரையை கொழுப்புடன் கலந்து உண்ணக் கூடாது. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கொழுப்பு அதிகமுள்ள பால், நெய், வெண்ணெய், முட்டை போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வதுடன் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்வுடன் பேண முடியும்.