வாய் நாற்றத்திற்கு காரணம்

வெள்ளி, 17 ஏப்ரல் 2009 (13:18 IST)
பற்களிலும், ஈறுகளிலும் நோய்த்தொற்று ஏற்பட்டு சொத்தைப்பல், பயோரியா, போன்ற வியாதிகள் உண்டானால் வாய் நாற்றம் அடிக்கும்.

டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், தொண்டைப்புண், வாய்ப்புண், அஜீரணம் ஆகியவற்றாலும் வாய் நாற்றம் எடுக்கும்.

இதனைப் போக்க வாயை எப்போதும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

இனிப்புகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் உடனடியாக வாயை கொப்பளித்து சுத்தப்படுத்திவிட வேண்டும்.

வெற்றிலை, பான் மசாலா உபயோகிப்பதை தவிர்க்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்