ஜா‌க்‌கிரதையாக வாழு‌ங்க‌ள் - எ‌ய்‌‌ட்‌ஸ் ‌பிர‌ச்சார‌ம்

வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (12:34 IST)
செ‌ன்னை நகர ஆயுத‌ப்படை காவ‌ல்துறை‌யினரு‌க்கான எ‌ய்‌ட்‌ஸ் ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ‌பிர‌ச்சார‌த்‌தி‌ல், எ‌ப்படியு‌ம் வாழு‌ங்க‌ள். ஆனா‌ல் ஜா‌க்‌கிரதையாக வாழு‌ங்க‌ள் எ‌ன்று அ‌றிவுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னை நகர காவ‌ல்துறை‌யினரு‌க்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நேற்று முதல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக சென்னை நகரின் ஆயுதபடை காவ‌ல்துறை‌யினரு‌க்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டது. இவ‌ர்களை‌த் தொட‌ர்‌ந்து ம‌ற்ற காவல‌ர்களு‌‌க்கு‌ம் இ‌ந்த ‌பிர‌ச்சார‌ம் ‌வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம்.

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடக்கிறது. ‌வி‌ழி‌ப்புண‌ர்வு முகா‌மி‌ன் மு‌த‌ல் நாளான நே‌ற்று, துணை ஆணைய‌ர்க‌ள் ஆ‌சிய‌ம்மா‌ள், ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர் தாங்கள் சந்தித்த பல்வேறு சோகங்களை பாடமாக எடுத்து சொன்னார்கள். ஆண் ஓரின சேர்க்கையால் எய்ட்ஸ் நோய் வந்தவர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட விபசார பெண், அரவாணி, போதை ஊசியால் எய்ட்ஸ் நோய் வந்தவர் இப்படி பலதரப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை காவ‌ல்துறை‌யினரு‌க்கு எடுத்து சொன்னார்கள்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உரிய சிகிச்சை எடுப்பதால் 15 ஆண்டுகள் உயிர் வாழ்வதாக கூறினார். அவருக்கு கணவரும், குழந்தைகளும் இருப்பதாகவும் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌‌ப்படி எ‌ல்லா‌ம் இரு‌ந்தா‌ல் இ‌ப்படி எ‌ல்லா‌ம் நட‌க்கு‌ம் எ‌ன்று யாரோ ஒருவ‌ர் கூறுவதை ‌விட, அத‌ன் மூல‌ம் பா‌தி‌க்‌க‌ப்ப‌ட்டவ‌ர்களே நேரடியாக‌க் கூறு‌ம்போது அத‌ன் தா‌க்க‌ம் அ‌திக‌ம் எ‌ன்பதா‌ல் இ‌ந்த முறை‌யி‌ல் ‌பிர‌ச்சார‌‌த்‌தி‌ற்கு ஏ‌ற்பாடு ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாநில எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் சத்தியநாராயணன் பே‌சிய யதா‌ர்‌த்தமான கரு‌த்துக‌ள் அனைவரையு‌‌ம் கவரு‌ம் வகை‌யி‌ல் இரு‌ந்தது.

"தமிழக காவ‌ல்துறை‌யி‌ல் உ‌ள்ள காவல‌ர்க‌ள் 107 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு உள்ளது. அவர்கள் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதை டி.ஜி.பி.க்கு கூட தெ‌ரி‌வி‌க்கமாட்டோம். எய்ட்ஸ் நோய் வந்தவர்கள் பயப்பட வேண்டாம். தைரியமாக உண்மையை சொல்லுங்கள். அதற்கான சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள். எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும், அதை கட்டுப்படுத்த ஏ.ஆர்.டி. என்ற கூட்டு சிகிச்சை முறை உள்ளது. அதன்மூலம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தி நீண்டநாள் உயிர் வாழலாம்.

முத‌லி‌ல் எ‌ல்லா‌ம் எ‌ய்‌ட்‌ஸ் ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ‌பிர‌ச்சார‌த்‌தி‌ன் போது திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்ளாதீர்கள் என்று சொன்னார்கள். அதை யாரும் கேட்கவில்லை. திருமணத்திற்கு பின்பு மனைவியோடு மட்டும் உடலுறவு வையுங்கள் என்று சொன்னார்கள். அதுவும் யார் காதிலும் விழவில்லை. இதேபோல ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தையும் மறந்து வருகிறார்கள்.

அதனா‌ல்தா‌ன் நா‌ங்க‌ள் த‌ற்போது எ‌ங்களது ‌பிர‌ச்சார வா‌க்‌கிய‌த்தை, எப்படியும் வாழுங்கள், ஆனா‌ல் ஜாக்கிரதையாக வாழுங்கள். தவறான உறவில் ஈடுபடும்போது கண்டிப்பாக காண்டம் அணிந்து கொள்ளுங்கள் என்று மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளோ‌ம்.

எ‌ய்‌ட்‌ஸ் நோ‌ய் ‌‌வி‌ழி‌ப்புண‌ர்வு‌ ‌பிர‌ச்சார‌த்தை காவ‌‌ல்துறை‌க்கு நட‌த்துவத‌ற்கு மு‌க்‌கிய‌க் காரண‌ம், மற்ற துறைகளைவிட காவ‌ல் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தவறு செய்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. மனைவிமார்களை பிரிந்து பாதுகாப்பு பணிக்காக காவல‌ர்க‌ள் நீண்ட நாள் வெளி‌யூர்களில் தங்க நேரிடும். அதுவும் ஆயுதப்படை காவ‌ல்துறை‌யினரு‌க்கு இதுபோன்ற சந்தர்ப்பம் அதிகமாக இரு‌க்கும். அப்போது தவறு செய்ய நேரிடும். எனவே ஜாக்கிரதையாக உங்கள் உறவை வைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று சத்தியநாராயணன் அ‌றிவுறு‌த்‌தினா‌ர்.

இந்த பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெறும் என்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த உதவி ஆணைய‌ர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்