நமது உடலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்தாலோ அல்லது தேவையை விட குறைந்தாலோ ஏற்படும் நோயே சர்க்கரை நோயாகும்.
சர்க்கரை நோயை (ரத்த சர்க்கரை அளவை) கட்டுப்படுத்தத் தவறினால், அது உடலின் இயல்பான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கி விடும்.
உடலுக்குத் தேவையான சக்தியை அளிப்பதில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை முக்கியப் பங்காற்றுகிறது. அதுவே சர்க்கரை அளவு அதிகரித்தால், பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
சர்க்கரை அளவை பராமரிப்பதில் இன்சுலின் சுரப்பி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகவே சர்க்கரை நோயாளிகள் நோய் பாதிப்பைத் தவிர்க்க இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கிறார்கள்.
எனவே ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து, நோய் பாதிப்பின்றி வாழ்வதற்கு தயாராகுங்கள்.