வியாழன், 15 ஏப்ரல் 2010 (17:12 IST)
தேவையானவை
புதினா இலை - 2 கப்
தேங்காய் - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி
புளி - பட்டாணி அளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது
கடுகு - தாளிக்க
செய்யும் முறை
புதினா இலையை ஆய்ந்தெடுத்து, ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயை வில்லைகளாகப் போட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய் வில்லை, பருப்பு, புதினா இலை, பச்சை மிளகாய், சிறிது புளி, உப்பு போட்டு கொரகொரவென அரைக்கவும்.
எண்ணெய் ஊற்றி கடுகு போட்டுத் தாளித்து புதினாத் துவையலில் சேர்த்து பரிமாறலாம்.