உங்கள் குழந்தைகளுக்கு உருளைக் கிழங்கு சாதம் செய்து பாருங்கள். தேவையானவைஉருளைக்கிழங்கு - 100 கிராம்அரிசி - 50 கிராம்உப்பு - சிறிதளவுஎண்ணெய் - 1 தேக்கரண்டிசோம்பு, பட்டை - சிறிதளவுசெய்முறை உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டு தேவையான அளவு நீர் விட்டு, உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
சாதம் வெந்து வரும்போது, வெந்த உருளைக்கிழங்கை பிசைந்து சாதத்தில் போட்டு சிறிது நேரம் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்து அதில் இந்த சாதத்தைப் போட்டு வதக்கி சாப்பிடவும்.
குழந்தைகளுக்கு இந்த மசித்த உணவு மிகவும் பிடிக்கும்.