மா‌ங்கா‌ய் சாத‌ம்

செவ்வாய், 23 ஜூன் 2009 (15:16 IST)
மாங்காய் சாத‌ம் ‌மிகவு‌ம் சுவையாக இரு‌க்கு‌ம்.

தேவையான பொருள்கள்
வேகவைத்த சாதம் - 2கப்
துருவிய மாங்காய் - 1கப்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - 1ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை - 1கையளவு
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இழை - சிறிதளவு
வறுத்து பொடித்த வெந்தயம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவ


செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
வறுத்ததும் கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும்.
பின்பு அதனுடன் மஞ்சள் தூள், துருவிய மாங்காய் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
வதக்கியவுடன் உப்பு, வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
அடுப்பை சிறிதாக வைத்து தணலில் 5 நிமிடம் வைக்கவும்.
மேலாக கொத்தமல்லி இழையை தூவவும்.
சுவையான மாங்காய் சாதம் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்