வெள்ளி, 12 மார்ச் 2010 (17:01 IST)
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 200 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
கேரட் - 2
நெய் - 2 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - சிறிது
செய்முறை:
புழுங்கல் அரிசியை நன்றாக ஊற வைத்து கெட்டியாக மைபோல அரைத்துக் கொள்ளவும்.
கேரட்டை தோல் சீவி, திருகிக் கொள்ளவும்.
வாணலியில் நெய்யை சூடாக்கி திருகின கேரட்டை வதக்கி சர்க்கரை சேர்க்கவும். இறக்கும் போது எலுமிச்சம் சாறு ஊற்றவும்.
அரைத்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி நடுவில் கேரட் பூரணத்தை வைத்து மூடவும்.
வாழை இலையை சிறு துண்டுகளாக்கி அவற்றின் நடுவில் கொழுக்கட்டையை வைத்து நூலினால் கட்டவும்.
எண்ணெய் தடவிய இட்லி தட்டில் இவற்றை அடுக்கி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
இந்த கேரட் கொழுக்கட்டை சுவையாக இருப்பதோடு கலர்ஃபுல்லாகவும் இருக்கும்.