பருப்பு போளி

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:08 IST)
webdunia photoWD
விடுமுறை நா‌ட்க‌ளி‌ல் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் குடு‌ம்ப‌த்‌தினரு‌க்கு பரு‌ப்பு‌ப் போ‌ளி செ‌ய்து கொடு‌த்து அச‌த்து‌ங்க‌ள். உ‌ங்க‌‌ள் ‌திறமையை‌க் க‌ண்டு அவ‌ர்க‌ள் வாயடை‌த்து போக வே‌ண்டு‌ம். எ‌ன்ன பரு‌ப்பு‌ப் போ‌ளி செ‌ய்ய‌த் தெ‌ரியாதா... கவலையை ‌விடு‌ங்க‌ள். உ‌ங்களு‌க்காக இ‌ங்கே செ‌ய்முறை‌க் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

மைதா - 2 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - அரை கப்
நெய் - தேவையான அளவு
கடலைப் பருப்பு - 1 கப்
துறுவிய தே‌ங்கா‌ய் - 1 க‌ப்
துளா‌க்‌கிய வெல்லம் - 1 1/4 கப்
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

செ‌ய்யு‌ம் முறை

மைதா மாவுட‌ன் மஞ்சள் தூள், உப்பு சே‌ர்‌த்து கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி‌க்கு மாவு ‌பிசைவது போ‌ல் ‌பிசை‌ந்து கொ‌ள்ளவு‌ம்.

மாவு ‌பிசையு‌ம் போதே அதனுட‌ன் நல்லெண்ணெய் சேர்த்து ‌பிசை‌ந்து அரை ம‌ணி நேர‌ம் மூடி வை‌க்கவு‌ம்.

கடலை‌ப் பரு‌ப்பை ந‌‌ன்கு வேக வை‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வேகவை‌த்த கடலை‌ப் பரு‌ப்பு, துரு‌விய தே‌ங்கா‌ய், வெ‌ல்ல‌ம், ஏல‌க்கா‌ய் சே‌ர்‌த்து‌ ‌மி‌க்‌‌ஸி‌யி‌ல் போ‌ட்டு அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். த‌ண்‌ணீ‌ர் அ‌திகமாக ‌விட‌க் கூடாது. கெ‌‌ட்டியாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌ப்போது ச‌ப்பா‌த்‌தி மாவை ‌‌சி‌றிய அள‌வி‌ல் ‌திர‌ட்டி அத‌ன் ‌மீது பூரண‌த்தை ஒரு உரு‌ண்டை ‌பிடி‌த்து வை‌க்கவு‌ம். ‌பி‌ன்ன‌ர் ச‌ப்பா‌த்‌தி மாவோடு சே‌ர்‌த்து ‌மீ‌ண்டு‌ம் அதனை உரு‌ண்டையாக மா‌ற்றவு‌ம்.

webdunia photoWD
த‌ற்போது பூ‌ரி‌க் க‌ல்‌லி‌ன் ‌மீது எ‌ண்ணெ‌ய் தட‌வி இ‌ந்த உரு‌‌ண்டையை ச‌ப்பா‌த்‌தி போல ‌திர‌ட்டவு‌ம்.

அதனை தோசை‌க் க‌ல்‌லி‌ல் போ‌ட்டு சு‌ற்‌றி நெ‌ய் ‌வி‌ட்டு ‌பொ‌ன்‌னிறமாக வரு‌ம் வரை வேக ‌வி‌ட்டு எடு‌க்கவு‌ம்.

சுட‌ச் சுட பரு‌ப்பு‌ப் போ‌ளி‌த் தயா‌ர். உடனே‌ப் ப‌ரிமாறு‌‌ங்க‌ள். பாரா‌ட்டு‌க்களை‌ப் பெறு‌ங்க‌ள்.


கு‌றி‌ப்புக‌ள் : சு‌ட்ட‌ப் போ‌லிகளை ஒ‌ன்ற‌ன் ‌மீது ஒ‌ன்றாக வை‌க்க வே‌ண்டா‌ம். அகலமான த‌ட்டி‌ல் வை‌த்து ஆற ‌விடவு‌ம். ‌ அரைத்த கடலை மாவு தளர்த்தியாக இருந்தால் வெறும் வாணலியில் போட்டு கிளறி சிறிது கெட்டிப்பட்டதும் இறக்கவும்.