ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:11 IST)
வாழைக்கு ஏது சீசன்? எல்லா நாட்களிலும் மலிவாகவும் கிடைக்கும் வாழைப்பழத்தை வைத்து கேக் செய்து அசத்துங்கள் உங்கள் குடும்பத்தாரை.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
மைதா மாவு - 300 கிராம்
சக்கரைப் பவுடர் - 300 கிராம்
வெண்ணெய் - 250 கிராம்
வாழைப்பழம் - 4
உலர் திராட்சை - 125 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி
கோழி முட்டை - 5
வாழைப்பழ எசன்ஸ் - 1 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி
சோடியம் பை கார்பனேட் - 1 தேக்கரண்டி
செய்யும் முறை
மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா இரண்டையும் சலித்துக் கொள்ளவும்.
வாழைப்பழத்தையும் சோடியம் பை கார்பனேட்டையும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.
வெண்ணெயை, சர்க்கரைப் பவுடருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
முட்டையை நுரை பொங்க அடிக்க வேண்டும். அடித்த முட்டையுடன், வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும்.
முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி, எசன்சுகள் அனைத்தையும் நன்கு பிசைந்து கலவையிட வேண்டும்.
நன்கு அகண்ட தகர ட்ரேயில் பட்டர் பேப்பர் லைனிங் செய்து, வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி சுமார் 1 மணி நேரம் இளம் தீயில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான வாழைப்பழ கேக் தயார்.