ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:12 IST)
மாம்பழ ஜூஸ் செய்திருப்பீர்கள்... மாம்பழ ஐஸ்க்ரீம் செய்திருக்கின்றீர்களா... இப்போது மாம்பழ சீசன். மலிவாக கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டு சுவையான ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
மாம்பழச்சாறு - 2 டம்ளர்
பால் - 2 டம்ளர்
உணவுக்கான ஜெலடீன் பவுடர் - 2 ஸ்பூன்
சர்க்கரை - சிறிதளவு
செய்யும் முறை
ஜெலடீன் பவுடரை சிறிதளவு சுடு தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.
மாம்பழச் சாற்றுடன், காய்ச்சிய பால், சர்க்கரை, ஜெலடீன் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.
இக்கலவையை ஃப்ரீஸரில் வைக்கவும். கலவை பாதி உறைந்திருக்கும் நிலையில் வெளியே எடுத்து நன்கு அடித்துக் கலக்கி மறுபடியும் ஃப்ரீஸரில் வைக்கவும்.
சிறிது நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் தயார்.