சமைய‌லி‌ல் எ‌ண்ணெ‌‌யி‌ன் பய‌ன்பாடு

திங்கள், 17 மே 2010 (14:38 IST)
எண்ணெயினை சிலர் தூக்கில் அல்லது எண்ணெய் கேனில் ஊற்றி வை‌த்‌திரு‌ப்பா‌ர்க‌ள். அப்படி வைத்து பயன்படுத்தும் பொழுது நேரடியாக அப்படியே பா‌த்‌திர‌த்‌தி‌ல் ஊ‌ற்‌றி சமை‌க்காம‌ல் ஒரு கரண்டியில் எடுத்து தேவைக்கு தகுந்தது போல் ஊற்றவும்.

அ‌ல்லது, ஒரு ‌சி‌றிய ட‌ப்பா‌வி‌ல் ஊ‌ற்‌றி வை‌த்து சமை‌க்க‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். இதனா‌ல் எ‌ண்ணெ‌யி‌ன் பய‌ன்பாடு குறையு‌ம்.

வீ‌ட்டி‌ல் சமையலு‌க்கு ‌சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட (‌ரீபை‌ன்‌டு) எ‌ண்ணெயை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல், ‌சி‌றிய அள‌வி‌ல் ந‌ல்லெ‌ண்ணையு‌ம் வா‌ங்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

மிளகா‌ய் பொடி போ‌ன்று நேரடியாக எ‌ண்ணையை சா‌ப்‌பிடு‌ம் உணவுகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணையை பய‌ன்படு‌த்தலா‌ம்.

ச‌ட்‌‌னி, மோ‌ர் போ‌ன்றவ‌ற்றை தா‌ளி‌க்க ‌மிகவு‌ம் குறை‌‌ந்த அளவு எ‌ண்ணெயை‌ப் பய‌ன்படு‌த்தவு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்