கத்தரிக்காயை நறுக்கிய பின் சிறிது நேரம் கழித்தும் அதன் நிறம் மாறாமலிருக்க, அதன் வெட்டுப்பகுதிகளில் எல்லாம் உப்பு தண்ணீரை தெளிக்கவும்.
நறுக்கிய ஆப்பிள்கள் நிறம் மாறாமல் நீண்ட நேரம் காணப்பட வேண்டுமானால், குளிர்ந்த உப்பு தண்ணீரில் அவற்றை நனைத்து டவலில் துவட்டி எடுத்து வைத்தால் நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
உருளைக்கிழங்கு ஆவியில் வைப்பதற்கு முன்பு சிறிது வினிகரை அந்தத் தண்ணீரில் சேர்த்தால், கிழங்கு சீக்கிரமாக நன்றாக வெந்துக் காணப்படும்.
வெண்டைக்காயை சமைக்கும் போது பாத்திரத்துடன் ஒட்டிக்கொள்ளாமல் காணப்பட, சிறிதளவு தயிரை சேர்த்துக்கொள்ளவும்.
ஃகாலிபிளவர், முட்டைகோஸ் முதலியவற்றை வேக வைக்கும்போது ஒரு வித நாற்றம் வரும். அதைத் தடுக்க சிறிது எலுமிச்சம் பழச்சாறு, அல்லது ஒரு சிறிய இஞ்சித் துண்டை சேர்த்து வேகவைக்கலாம்.