பானி பூரி செய்யும் போது முக்கியமாக தண்ணீர் தேவைக்கு மேல் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாவு அதிகமான நேரம் ஊறவும் கூடாது. அப்போதுதான் பூரி கடினமாக இருக்கும்.
பொதுவாக வெள்ளை பூசணி அதிக நீர் உள்ள ஒரு காயாகும். ஆகவே வாரத்துக்கு இரு முறை பூசணிக்காய் சாறு பல்லது பயத்தம்பருப்பு போட்டு பூசணிக்காய் கூட்டோ செய்து உண்பது நல்லது.
காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளறிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு, எலுமிச்சை பிழியவும். அருமையாக சாலட் தயார்.
கடைகளில் இரண்டு விதமான நார்த்தங்காய் உள்ளது. இதில் ஒரு வகை கசப்பானது. வாங்கும் பொழுது கசப்பு இல்லாத நார்த்தாங்காயை கேட்டு வாங்கி குழம்பில் சேர்த்தால் அருமையாக இருக்கும்.