குழ‌ம்பு ‌மீ‌ன் வறுவ‌ல்

புதன், 17 மார்ச் 2010 (15:12 IST)
தேவையானவை

மீன் - 1/4 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 2
புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த் தூள் - 4 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
கடுகு - 1/2 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - கா‌ல் க‌ப்
க‌றிவே‌ப்‌பிலை - ‌சி‌றிது

செய்முறை :

மீனை சு‌த்த‌ம் செ‌ய்யவு‌ம்.

தக்காளி, வெங்காய‌‌த்தை நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பு‌ளியை‌க் கரை‌த்து அ‌தி‌ல் உ‌ப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சே‌ர்‌‌க்கவு‌ம்.

அடுப்பில் குழ‌ம்பு பாத்திரத்தை வைத்து தா‌ளி‌த்து, வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்குங்கள்.

வத‌ங்‌கியது‌ம் புளி‌க் கரைசலை ஊ‌ற்‌றி‌க் கொதிக்க விடுங்கள்.

குழம்பு சு‌ண்டி வரு‌ம் போது, கழுவிய மீனைப் போட்டு 10 ‌நி‌மிட‌ம் ‌மிதமான ‌தீ‌யி‌ல் குழ‌ம்பை வை‌த்து இறக்குங்கள்.

இ‌ந்த குழ‌ம்‌பி‌ல் இரு‌ந்து ‌மீனை எடு‌த்து தவா‌வி‌ல் போ‌ட்டு எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்று‌ங்க‌ள். ‌மீ‌ன் ‌மீது ‌சி‌றிது குழ‌ம்பையு‌ம் ஊ‌ற்‌றி ‌திரு‌ப்‌பி‌ப் போ‌ட்டு ‌மீ‌ண்டு‌ம் குழ‌ம்பையு‌ம், எ‌ண்ணெயு‌ம் ஊ‌ற்‌றி வறு‌த்தெடு‌ங்க‌ள்.

பு‌ளி‌க் கரைச‌லி‌ல் வெ‌ந்த ‌மீ‌னி‌ன் வறுவ‌ல் சுவை அருமையாக இரு‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்