சை‌னீ‌ஸ் இறால் வறுவ‌ல்

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:53 IST)
எ‌ப்போது‌ம் த‌‌க்கா‌ளி, வெ‌ங்காய‌த்தை போ‌ட்டு வை‌க்கு‌ம் இறா‌‌ல் வறுவலு‌க்கு ப‌திலாக சை‌னீஸ் சமைய‌ல் முறை‌யி‌ல் செ‌ய்து பா‌ர்‌த்து சுவையு‌ங்க‌ள்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

இறால் - 200 கிராம்
தக்காளி சாஸ் - 1 ‌‌ஸ்பூ‌ன்
மிளகாய் வற்றல் விழுது - 1 ‌ஸ்பூ‌ன்
சைனீஸ் உப்பு
மோனோ சோடியம் குளுடோமேட்
கார்ன்ஃபிளோர் - 1 கை‌ப்‌பிடி
இஞ்சி, பூண்டு விழுது
1 முட்டையின் வெள்ளைப் பகுதி
உப்பு
தண்ணீர்
எண்ணெய்
எப்படி செய்வது?

இறாலை தோ‌ல் உ‌ரி‌த்து ந‌‌ன்கு அல‌கி சு‌த்த‌ம் செ‌ய்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

முட்டையின் வெள்ளைப் பகுதி, கார்ன்ஃபிளோர், ‌சி‌‌றிது உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும்.

அந்த கலவையில் உ‌ரி‌த்து வை‌த்து‌ள்ள இறாலை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

தக்காளி சாஸ், சைனீஸ் உப்பு, மீதமுள்ள கார்ன்ஃபிளோர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் வற்றல் விழுது ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.

தேவையான அளவு எண்ணெயைச் சூடாக்கி, ஊற வைத்த இறாலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

பி‌ன்ன‌ர் கடா‌யி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அது சூடானது‌ம் தக்காளி சாஸ் கலவையை 1 நிமிடம் வதக்கவும்.

இதில் இறாலைக் கலந்து மேலும் 5 நிமிடம் வதக்கவும்.

சுவையான ‌சை‌‌னீ‌ஸ் இறால் வறுவ‌ல் தயா‌ர்!

வெப்துனியாவைப் படிக்கவும்