வயிற்றில் இருக்கும் எந்த பிரச்சினைக்கும் இஞ்சி அருமருந்தாகும். இஞ்சியை நமது உணவு வகைகளில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆந்திராவில் அதனை சட்னி செய்து சாப்பிடுகிறார்கள்.
இதோ உங்களுக்கான இஞ்சி சட்னி செய்யும் முறை
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
இஞ்சி - 100 கிராம் கடுகு - சிறிதளவு வெந்தயம் - சிறிதளவு உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் பச்சை மிளகாய் 3 வெல்லம் - நெல்லிக்காய் அளவு எண்ணெய் - சிறிதளவு கறிவேப்பிலை - ஒரு கீற்று உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
இஞ்சியைத் தோல் நீக்கி கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
webdunia photo
WD
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். பிறகு அதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய கலவை, இஞ்சி, வெல்லம், மஞ்சள்தூள், தேவையான அளவிற்கு உப்புச் சேர்த்து கெட்டியாய் அரைத்து எடுக்கவும்.
சுவையான இஞ்சி சட்னி தயார்.
இதனை இரண்டு மூன்று நாட்களுக்கு உபயோகப்படுத்தலாம். கெடாது.