த‌ண்‌ணீ‌ர் ‌விடாம‌ல் தக்காளி தொக்கு

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (10:33 IST)
வெ‌ளியே எ‌ங்கேனு‌ம் செ‌ல்லு‌ம்போது இ‌ட்‌லி, ச‌ப்பா‌த்‌தி‌க்கு த‌ண்‌ணீ‌ர்‌விடாம‌ல் த‌க்கா‌ளி தொ‌க்கு செ‌ய்து எடு‌த்து‌ச் செ‌ன்றா‌ல் 2 நா‌ட்க‌ள் கூட கெடாம‌ல் இரு‌க்கு‌ம்.

தேவையானபபொருட்கள

தக்காளி - 5

தனியதூள் - 1 ‌தே‌க்கர‌ண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

பூண்டு - 5

இஞ்சி - சிறிதுண்ட

நல்லெண்ணெய் - 1/4 கப

உப்ப

மஞ்சளதூள

கறிவேப்பிலை, கொ‌த்து ம‌ல்‌லி

செய்முறை :

இஞ்சி, பூண்டதோலசீவிகநசுக்கி ‌விழுதாக அரை‌த்து வைத்துககொள்ளவும். தக்காளி, வெ‌ங்காய‌த்தை நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அடு‌‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து அ‌தி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு சோ‌ம்பு போ‌ட்டு தா‌ளி‌க்கவு‌ம். நறு‌க்‌கிய வெ‌ங்கயா‌ம், த‌க்கா‌‌ளியை ந‌ன்கு வத‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

அ‌தி‌ல் இ‌ஞ்‌சி பூ‌ண்டு ‌விழுது, மஞ்சளதூள், தனியதூள், மிளகாயதூள், உப்பபோட்டகிளறி விடவும்.

த‌‌க்கா‌ளி தொ‌க்‌கி‌ற்கு எ‌ண்ணெ‌ய் கொ‌ஞ்ச‌ம் தாராளமாக ‌விட வே‌ண்டு‌ம். ந‌ல்ல ‌சிவ‌ந்த ‌நிற‌த்‌தி‌ல் வ‌ந்தது‌ம் இற‌க்‌கி க‌‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்து ம‌ல்ல‌ி தூ‌வி

சுவையான இந்த தக்காளி தொக்கை எந்த விதமான காலை உணவிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்