தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களை அச்சப்படுத்தும் சென்செக்ஸ்..!
புதன், 3 ஜனவரி 2024 (11:10 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இந்த வாரம் முழுவதுமே இறக்கத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி 1, 2 ஆகிய இரண்டு நாட்களும் பங்குச்சந்தை இறங்கிய நிலையில் இன்றும் சரிவில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்று முன் 338 புள்ளிகள் சரிந்து 71 ஆயிரத்து 554 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சார்ந்து 21,563 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அதானி என்டர்பிரைசஸ், மணப்புரம் பைனான்ஸ், எல்என்டி பைனான்ஸ் ஆகிய பங்குகள் அதிகரித்துள்ளதாகவும் ஜேஎஸ்டபிள்யூ ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.