தேவையான பொருட்கள்:
1 கப் காளான் - சுமார் 100 கிராம், 1 தேக்கரண்டி வெண்ணெய், 1 தேக்கரண்டி பூண்டு நறுக்கியது, 1 தேக்கரண்டி மிளகு பொடி, 1 தேக்கரண்டி தைம் / கலப்பு மூலிகைகள் (Italian herbs), உப்பு, கொத்தமல்லி
பட்டர் கார்லிக் மஷ்ரூம் செய்முறை:
-
காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து, மெல்லியதாக நறுக்கி தனியாக வைக்கவும்.
-
ஒரு கடாயில் வெண்ணெய் உருகவும், இதனுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் காளான் சேர்க்கவும்.
-
இதனை ஒரு நிமிடம் வதக்கவும், ஒரு நிமிடம் சமைக்கவும், பின்னர் மீண்டும் வதக்கவும்.
-
காளனில் இருந்து தண்ணீர் வெளியேறும், எனவே அது உலரும் வரை சமைக்கவும்.
-
பின்னர் மிளகு, இடாலியன் ஹெர்ப்ஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
-
கடைசியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் அணைக்கவும். இபோது பூண்டு பட்டர் கார்லிக் மஷ்ரூம் தயார்.
குறிப்பு:
காளான்களை அடிக்கடி வதக்கிக் கொண்டிருக்க வேண்டாம். சமமாக சமைக்கும் வகையில் தட்டையான தவாவைப் பயன்படுத்தலாம்.