இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.