நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன.
சிவகங்கையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்த முயற்சித்ததாகவும் ஆனால் அவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கட்சி மேலிடம் அவரை நிறுத்த தயங்குவதாகவும் கூறப்படுகிறது. ஆகவே சிவகங்கையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.