பாஜக தலைமை மார்ச் 21 முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால், இதற்கு முன்னரே எச்.ராஜாவும், வானதி சீனிவாசனும் இதர்கு முன்னரே வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டனர்.
இது பாஜகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் தமிழிசை எச்.ராஜா மீது கடும் கோபத்தில் இருந்தார் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவிக்கும் முன்னரே எச்.ராஜாவும் வானதி சீனிவாசனும் அறிவித்து விட்டார்கள். இந்த விவகாரத்தில் தலைவராக அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று தமிழிசையிடம் கேடகப்பட்டது.
இதற்கு அவர், வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னரே இருவரும் அறிவித்தது தவறுதான். அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. வருங்காலத்தில் இதுபோன்று நடக்காது, நடக்கக் கூடாது.