இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
படத்தில் வில்லனாக ர் ஃபகத் பாசில் நடிக்கிறார். இந்நிலையில் சற்றுமுன் ராஷ்மிகாவின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் வீட்டில் சமையல் செய்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவசரமாக தன் உடைகளை மாற்றி கண்ணாடியைப் பார்த்து காதணி மாட்டுகிறார். இதில் ராஷ்மிகா மிகவும் ஏழ்மையான மற்றும் கவலையுடன் தோற்றமளிக்கிறார்.