இது நியாயமா ஆண்டவரே..?

சனி, 16 செப்டம்பர் 2017 (16:24 IST)
ஆண்டவர் செய்துவரும் செயல் அவருக்கே நியாயமா என்று குமுறுகிறது சேனல் நிர்வாகம்.



 
ஆண்டவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, அந்த சேனலில் அவ்வளவு பிரபலம். அந்த நிகழ்ச்சியில் ஆண்டவர் அரசியல் பேசுவது சேனல் நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் ஆண்டவர் செய்யும் செயல் நிர்வாகத்தைக் கடுப்பாக்கியிருக்கிறது.

நிகழ்ச்சி குறித்து விவாதிப்பதற்காக, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டிருக்கிறார்கள் சேனல் நிர்வாகத்தினர். வாரத்துக்கு இரண்டு நாட்கள் அங்கு கூடி விவாதிப்பதாகத் திட்டம். ஆனால், ஆண்டவரோ அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டாராம். வீட்டுக்கு கூட போகாமல் அவர் டேரா போட்டிருப்பதால், எக்கச்சக்க பில் வருகிறதாம். இதை அவரிடம் சொல்ல முடியாமல் புலம்புகிறது சேனல் நிர்வாகம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்