ஒருகாலத்தில் பல பெண்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் ‘ரன்’ நடிகர். இங்கிருந்து பாலிவுட்டுக்குப் போனவர், நிரந்தரமாக அங்கேயே செட்டிலாகி விட்டார். பல வருடங்கள் கழித்து குத்துச்சண்டை படத்தின் மூலம் தமிழில் ரீஎண்ட்ரி ஆனார். அந்தப் படம், செம ஹிட். சமீபத்தில் போலீஸாக நடித்து வெளியான படமும் சூப்பர் ஹிட்.
ஆனாலும், அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாக ரொம்பவே யோசிக்கிறாராம். அவரைப் பிடித்து கதை சொல்வதற்குள், படாதபடு படுகிறார்களாம் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும். நடிகர் இந்த அளவு யோசிக்க என்ன காரணம்? நிறைய படங்களில், வித்தியாசமான வேடங்களில் நடித்தாயிற்று. எல்லா படங்களையும் ஒப்புக் கொள்ளாமல், மனதுக்குப் பிடித்த சில படங்களில் நடித்தால் போதும் என்று நினைக்கிறாராம். அதாவது, வருடத்துக்கு ஒரு படம் பண்ணால் கூட போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாராம். ஜெயித்துக் கொண்டே இருக்கிற இடத்தில், ஒரு தோல்விப் படம் வந்தால் கூட, அது தன்னுடைய இமேஜுக்கு நல்லதில்லை என நினைக்கிறாராம் ‘ரன்’ நடிகர்.