லைகாவின் தி.நகர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு ஏன்?

சனி, 7 அக்டோபர் 2017 (06:30 IST)
கோலிவுட் திரையுலகில் சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்துள்ள லைகா நிறுவனம் மீது நேற்று ஜிஎஸ்டி அலுவலக அதிகாரிகள் திடீர் சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ''2.0', கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு', உதயநிதி ஸ்டாலினின் 'இப்படை வெல்லும்', நயன்தாராவின் ;கோலமாவு கோகிலா உள்பட பல படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சுமார் ரூ.1000 கோடி அளவில் கோலிவுட்டில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படும் லைகா நிறுவனத்தின் சென்னை அலுவலகம் தி.நகரில் உள்ளது.
 
இந்த அலுவலகத்தில் நேற்று திடீரென ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை செய்தனர். லைகா நிறுவனம் ஜிஎஸ்டி வரியில் முறைகேடு செய்ததா என்பது குறித்து அறியவே இந்த சோதனை என்று கூறப்பட்டாலும் இந்த சோதனை குறித்து வேறு தகவல்கள் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்