ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் அதிக விலை கொண்ட வரையும் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட Pad களை வெளியிட்டுள்ள நிலையில் அதே போல சிறப்பம்சங்களுடன் குறைந்த விலையில் தனது புதிய Pad 6 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது ஷாவ்மி.
Pad எனப்படும் டேப்லட் வகைகளில் வரையும் வசதிக் கொண்ட Pad மிகவும் பிரபலமானவை. இந்த எலைட் பேட்களுக்கென தனி எலெக்ட்ரானிக் பென்சில், வயர்லெஸ் கீ போர்ட் உள்ளிட்ட பல வசதிகளும் கிடைக்கின்றன. ஒரு மினி லேப்டாப்பாக, எடிட்டிங் சிஸ்டமாக கூட இந்த பேட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆப்பிள் இவ்வாறான வசதிக் கொண்ட பேட்களை ரூ.75,000 முதலும், சாம்சங் நிறுவனம் ரூ.40,000 முதலும் அறிமுகப்aபடுத்தி உள்ளன. பல்வேறு பயன்பாடுகளை கொண்ட இந்த பேட்கள் கிராபிக் டிசைனர்கள், பொது பயனாளர்கள் இடையே பிரபலமாக இருந்து வருகிறது.
இந்த Xiaomi Pad 6 விற்பனை இந்தியாவில் ஜூன் 21ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது 8 ஜிபி + 128 ஜிபி மாடல் Xiaomi Pad 6ன் விலை ரூ.26,999 என்றும், 8 ஜிபி + 256 ஜிபி மாடல் Xiaomi Pad 6ன் விலை ரூ.28,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.