இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது முதலாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சமீபாக ஸ்னாப்ட்ராகன் சிப்செட் தொழில்நுட்பம் வைரலாகியுள்ள நிலையில் மீடியாடெக், ஸ்னாப்ட்ராகன் இடையே போட்டி நிலவி வருகிறது.
Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
-
6.73 இன்ச் LTPO3 அமோலெட் டிஸ்ப்ளே,
-
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2,
-
ஆக்டோகோர் சிபியூ, அட்ரினோ 740 ஜிபியு
-
12ஜிபி/ 16 ஜிபி ரேம், 256 ஜிபி/512 ஜிபி/ 1 டிபி மெமரி,
-
32 எம்பி முன்பக்க கேமரா
-
50.3 எம்.பி வைட், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ, 50 எம்பி டெலிபோட்டோ, 50 எம்பி அல்ட்ரா வைட் என நான்கு லென்ஸ் கொண்ட குவாட் கேமரா
-
4900 mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங்,
-
அண்டர் டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட், வைஃபை, 5ஜி தொழில்நுட்பம்
இந்த Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போன் ப்ளாக், ஆலிவ் க்ரீன், வொயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் அடிப்படை விலை ரூ.71,590 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேம் மற்றும் மெமரி வசதிக்கேற்ப விலை மாறும். எனினும் அதீத கேமரா அம்சத்துடன் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ள இந்த Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போன் பலரை கவர்ந்துள்ளது.