இந்நிலையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு போலியான ஸ்டார் ரேட்டிங் போடுவதாகவும் அப்பொருட்கள் குறைந்த விலை உடையவைதான் எனவும் தகவல் வெளியாகிறது. அமேசான் நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்சம் 4 முதல் 5 ஸ்டார்கள் ரேட்டிங் போடப்படுகிறது. மக்கள் அப்பொருளை விரும்பி வாங்க வைப்பதாக இப்படி செய்வதாகவும், இதற்க்காக சிலருக்கு பொருளை வாங்குவதற்கான பணத்தை திரும்ப கொடுப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது.