ரிலையன்ஸ் ஜியோவையும், ஏர்டெல்லையும் மோதவிட்டு, சய்லன்டாக காயை நகர்த்தும் வோடோபோன்!!

திங்கள், 7 நவம்பர் 2016 (11:38 IST)
ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைதொடர்பு துறையில் நிலைத்திருக்க அதன் வியாபா தந்திர அலைகளை உருவாக்கிவிட்ட, அதனுடன் ஏர்டெல் நேரடி போரில் இறங்கியுள்ளது. 


 
 
அதே நேரத்தில் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் புத்திசாலித்தனத்தை திணிக்க வோடாபோன் தயாராகியுள்ளது.
 
இதம் தொடக்கமாக, தரவு மற்றும் அழைப்புகள் ஆகிய இரண்டையும் ஒன்றாக வழங்கும் 'ஃப்ளெக்ஸ்' என்ற புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஃப்ளெக்ஸ்:
 
ஒரு ஃப்ளெக்ஸ் ஆனது ஒரு எம்பி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நிமிட அளவிலான உள்வரும் அழைப்புகளாகும். 
 
ஒவ்வொரு ஃப்ளெக்ஸ் ரீசார்ஜுக்கும் பயனர் ஒரு குறிப்பிட்ட அளவு ஃப்ளெக்ஸ் பெறுவர். 
 
வோல்ட் தேவையில்லை:
 
ரிலையன்ஸ் ஜியோ போல அழைப்புகளுக்கு வோல்ட் ஆதரவு தேவையில்லை. 
 
அதே போல், வோடபோன் குரல் அழைப்புகளுக்கு தரவு பயன்பாடு தேவையில்லை. 
 
மலிவு விலை:
 
ஜியோவுடனான போட்டி முனைப்பில் வோடபோன் மிக மலிவான விலையில் சலுகையை வழங்குகிறது. ஆரம்ப திட்டம் ரூ.119/- ஆகும்.
 
இதன் மூலம் பயனர் 325 ஃப்ளெக்ஸ் பெற முடியும். அதை தரவாகவோ அல்லது குரல் அழைப்புகளாகவோ பயன்படுத்த முடியும். 
 
அதிகபட்ச விலையாக 28 நாள்கள் செல்லுபடியாகும் ரூ.1,750/- திட்டம் திகழ்கிறது.
 
தனிப்பட்ட டேட்டா ரீசார்ஜ்: 
 
ஃப்ளெக்ஸ் சலுகைகளில் வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் டேட்டாவும் பெறுவதால் தனித்தனியாக தரவு ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்