தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிரடி தீபாவளி ஆஃபர்!!

புதன், 26 அக்டோபர் 2016 (12:53 IST)
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஐடியா செல்லுலார், பிஎஸ்என்எல் மற்றும் வோடாபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  சிறந்த 4ஜி திட்டங்களை அறிவித்துள்ளது.


 
 
ரிலையன்ஸ் ஜியோ:
 
ரிலையன்ஸ் ஜியோ தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு டிசம்பர் 2017 வரை வெல்கம் ஆஃபர் வழங்கி வருகிறது. குறிப்பாக லைஃப் போன் பயனர்கள் அடுத்த ஆண்டு இறுதி வரை வெல்கம் ஆஃபர் பெற முடியும். இந்த சலுகை லைஃப் ப்ளேம் 7எஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தொடங்கியது.
 
ஏர்டெல்:
 
1 ஜிபி விலையில் 10 ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கியது. அதாவது வெறும் ரூ.259/-க்கு இந்த வாய்ப்பை பயனர்கள் எந்த விதமான கூடுதல் கட்டணம் செலுத்தாமல் சேவையை அனுபவிக்க முடியும்.
 
வோடாபோன்:
 
வோடபோன் அதிகாரப்பூர்வ நேஷனல் இலவச ரோமிங் உள்வரும் அழைப்புகளை மேற்கொள்ளும் சலுகையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் நிகழும் போட்டி காரணமாக இப்படியான ஒரு வாய்ப்பை சரியாக தீபாவளி நெருங்கும் சமயத்தில் அறிவித்துள்ளது.
 
பிஎஸ்என்எல்:
 
பிஎஸ்என்எல் தனது தீபாவளி சலுகையின் ஒரு பகுதியாக 10% கூடுதல் டாக்டைம் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் சேவையின் பயனர்கள் செய்கிற ஒவ்வொரு ரீசார்ஜ்க்கும் 10% கூடுதல் டாக்டைம் அத்துடன் தரவும் கிடைக்கும்.
 
ஐடியா:
 
ஐடியா செல்லுலார் வெறும் ரூ.1/-க்கு தனது பயனர்களுக்கு வரம்பற்ற 4ஜி தரவை வழங்குகிறது எனினும், இந்த சலுகையில் ஒரு சிக்கல் இருக்கிறது. இது 1 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்