உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி சந்தையில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் சாம்சங். ஆண்டுதோறும் பல மாடல் ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களை வெளியிடும் சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை நேற்று வெளியிட்டது. அதில் பெரும்பாலோனாரால் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy Z Flip 6 மற்றும் Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Samsung Galaxy Z Fold 6 மாடலானது இடமிருந்து வலம் மடிக்கும் வகையில் உள்ளது. விரிந்த நிலையில் ஒரு Tab அளவுக்கு அகலமாகவும், மடித்த நிலையில் ஒரு ஸ்மார்ட்போன் அளவிலும் இது இருக்கும். இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்.
Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
-
7.6 இன்ச் LTPO அமோலெட் டிஸ்ப்ளே
-
மடிக்கக்கூடிய டூவல் டிஸ்ப்ளே வசதி
-
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3 சிப்செட்
-
3.39 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
-
12 ஜிபி ரேம்
-
256 ஜிபி / 512 ஜிபி / 1 டிபி இண்டெர்னல் மெமரி
-
மெமரி கார்ட் ஸ்லாட் கிடையாது
-
50 எம்பி + 12 எம்பி + 10 எம்பி ப்ரைமரி ட்ரிபிள் கேமரா
-
10 எம்பி + 4 எம்பி முன்பக்க டூவல் செல்பி கேமரா
-
4400 mAh பேட்டரி, 25 W பாஸ்ட் சார்ஜிங்
-
15 W வயர்லெஸ் சார்ஜிங், 4.5 W ரிவர்ஸ் சார்ஜிங்
இந்த Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன் சில்வர் ஷேடோவ், பிங்க், நேவி ஆகிய 3 வண்ணங்களில் நார்மல் எடிஷனாக கிடைக்கிறது. க்ராப்டட் ப்ளாக், வொயிட் ஆகிய வண்ணங்கள் லிமிடெட் எடிஷனாக அறிமுகமாகியுள்ளது.
இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.1,64,999 ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,76,999 ஆகவும், 12 ஜிபி + 1 டிபி மாடலின் விலை ரூ.2,09,999 ஆகவும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24 முதல் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கும் நிலையில், இன்று முதல் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.