ரூ.303 ரீசார்ஜ் செய்யாமல் ஜியோ பிரைமில் 100 GB இலவசமாய் பெறுவது எப்படி??

புதன், 5 ஏப்ரல் 2017 (12:43 IST)
ரூ.99 ரீசார்ஜ் செய்து ரிலையன்ஸ் ஜியோ பிரைம் மெம்பராக இணைந்து கொண்டு, ரூ.303 அல்லது அதற்கு மேலான ரீசார்ஜை நிகழ்த்த அடுத்த மூன்று மாதங்களுக்கு சம்மர் ஆஃபரை பெறலாம்.


 
 
அதிலும் ரூ.303 ரீசார்ஜ் செய்தால் கடந்த 6 மாதம் காலமாக பெற்று வந்த அதே ஜியோ நன்மைகளை பெறலாம். எனவே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ரூ.303/- ரீசார்ஜை நிகழ்த்துகின்றனர்.
 
ஜியோ வழங்கும் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை திட்டங்களுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு டேட்டா பயன்பாட்டுக் கொள்கை தான்.
 
ரூ.303 அல்லது ரூ.499 ஆகிய ரீசார்ஜ் தேர்வுகளை நிகழ்த்தாமல் ரூ.999 அல்லது அதற்கு மேலான ரீசார்ஜ்களை நிகழ்த்தினால் மூன்று மாதங்களுக்கு 100 GB அளவிலான 4ஜி டேட்டா, இலவச அழைப்புகள், ரோமிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், மற்றும் ஜியோ ஆப்ஸ் சந்தா கிடைக்கும்.
 
இலவச 100 GB தரவை தீர்க்கும் வரை ஏப்ரல், ஜூன் காலத்தில் இவ்வளவு டேட்டா தான் பயன்படுத்த வேண்டுமென்ற எல்லை எதுவுமில்லை. 
 
ஒருவேளை ஏதோவொரு கட்டத்தில் 100 GB டேட்டா எல்லை பயன்பாடு தீர்ந்து விட்டால் இணையவேகம் 128 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்