இந்திய வீரர்கள் பொதுவாக களத்தில் விளையாடும் போது இந்தி அல்லது ஆங்கிலத்தில் உரையாடிக் கொள்வார்கள். ஆனால் ஒரு சில சமயங்களில் தத்தமது தாய்மொழியிலும் பேசிக் கொள்வது உண்டு. அந்த வகையில் நேற்று ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் சக தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தியிடம் தமிழில் பேசியது மைக்கில் கேட்டது.