இந்த வைகுண்ட ஏகாதசி உருவானதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. திருவரங்கத்திலே பெருமாளுக்கு திரு ஊழியம் செய்ய வாழ்வை அர்ப்பணித்தவர் திருமங்கையாழ்வார். அவரது அர்ப்பணிப்பில் திளைத்த ஸ்ரீரங்கநாதர் அவர் முன் தோன்றி வேண்டும் வரம் கேட்டார். அப்போது நம்மாழ்வார் பரமபதம் அடைந்த திருவாய் மொழிக்காக திருவிழா நடைபெற வரம் கேட்டார். அப்படியே ஸ்ரீரங்கநாதரும் அருளினார். நம்மாழ்வார் பரமபதம் அடைந்த இந்நாளில் ஸ்ரீரங்கநாதரை ஷேவித்து ஆழ்வார்களின் பாராசுரங்களை பாடுவதன் மூலம் நற்கதி அடைய முடியும்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் உற்சவமான திருமொழி திருவிழா நாளை நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தையும் பெருமாளுக்கு காலை 8 – 12 வரை நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் இசையுடன் பாடப்படுகிறது.