திருவண்ணாமலை கோயிலில் 7ஆம் தேதி தரிசன அனுமதி கிடையாது: அறநிலையத்துறை

வெள்ளி, 4 நவம்பர் 2022 (13:59 IST)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வரும் 7ஆம் தேதி அன்று பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என இந்து அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
 
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் எதிர்வரும் 7ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதி ஆகிய நாட்களில் பௌர்ணமி வரை இருப்பதால் 7ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது
 
அதனால் அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்புவார்கள் 
 
மேற்கண்ட தேதிகளில் அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும் விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாக நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது
 
மேற்படி பவுர்ணமி தினத்தன்று எந்தவித தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாது. இவ்வாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்