திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று காவிரி ஆற்றில் இருந்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீஇராமலிங்க சௌடேஸ்வரி அம்மனை அலங்கரிக்கபட்ட வாகனத்தில் அமரவைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது. அப்போது அம்மனை வணங்கி விரதமிருந்து வந்த வீரகுமாரர்கள் இரு கைகளிலும் கத்திகளை ஏந்தியும் லாவகமாக கையாண்டு ஆட்டமாடியவாறு தங்களது மார்பு மற்றும் கைகளில் வெட்டிகொண்டு தங்களது வழிபாட்டினை மேற்கொண்டனர். அப்போது 'தீஸ்கோ தள்ளி தீஸ்கோ' என்றும் கோஷங்களை எழுப்பியவாறு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு அம்மனை வணங்கினர்.