மேலும் இந்த கோவிலுக்கு வருகை புரிந்து பிராத்தனை செய்யும் பக்தர்களுக்கு தேங்காய், வெற்றிலையுடன் கூடிய சிகப்பு நிற துணி பை வழங்கப்படும். பிராத்தனை முடிந்த பிறகு அந்த பையினை அக்கோவிலுனுள் ஒப்படைத்து விட்டு பக்தர்கள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
கோவில் நிர்வாகிகள் மூன்று மாதம் கழித்து, அந்த பையினை அப்புறபடுத்துவார்கள் என்றும், அதற்குள் அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ராமாயண காலத்தில், ராவணனை வெல்லும் போரில், இலங்கைக்கு செல்லும் வழியில், ராமன், லட்சுமணன் ஆகியோர் கிருஷ்ணகிரி காடுகளில் ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது.