பௌர்ணமியன்று குளித்து, வீட்டை சுத்தம் செய்து, சுவாமி படங்களை பூக்கள் அணுவித்து, காலை ஆறு மணிக்குள் தலைவாசலில் அகல்விளக்கேற்றி, பிறகு பூஜையறையில் விளக்கேற்றி. மீண்டும் மாலை ஆறு மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அன்றையதினம் அசைவ உணவினை தவிர்க்க வேண்டும்.
பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும்போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும். கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.