சிவ ஆலய வழிபாட்டில் ஐப்பசி பௌர்ணமியும் அன்னாபிஷேக பலன்களும் !!

ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்க உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும்.

ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.
 
சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினல் குளிர்வது இயற்கைதானே.
 
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்படுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது. எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.
 
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.
 
சிவனாருக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்துக்கு, நம்மால் முடிந்த அரிசியை வழங்குவோம். நாம் வழங்கும் அரிசியானது, சாதமாகி, சிவசொரூபனுக்கு உடையாகி, அலங்கரிக்கப்பட்டு, அந்த அன்னத்தைக் கொண்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக, உணவாக வழங்கப்படுவது நமக்கு மிகுந்த புண்ணியத்தைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
 
அன்னாபிஷேகத்துக்கு, இயன்றதை வழங்குங்கள். ஒருகைப்பிடி அரிசியேனும் வழங்குங்கள். அன்னாபிஷேக தரிசனத்தை கண்ணாலும் மனதாலும் கண்டு உணருங்கள். வாழ்வில் யோகமும் ஞானமும் பெறுவீர்கள். வீட்டில் தரித்திர நிலையே அண்டாது. எப்போதும் உணவுக்குப் பஞ்சமிருக்காது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்