தங்கம் தயாரிப்பில் சீனா நம்ப‌ர் ஒ‌ன்; வாங்குவதில் இந்தியா நம்பர் ஒ‌ன்

வெள்ளி, 8 பிப்ரவரி 2013 (17:58 IST)
உலகின் தங்கம் தயாரிக்கும் நாடுகளில் சீனா தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. தங்கத்தை வாங்கும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது.

2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி சீனாவின் தங்கம் உற்பத்தி கடந்த ஆண்டை விட 11.66 சதவீகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி சுமார் 403 டன் தங்கத்தை உற்பத்தி சீனா உற்பத்தி செய்கிறது.

சீன கோல்ட் கூட்டமைப்பின் அறிக்கைப்படி 1949 ஆண்டைவிட இந்த ஆண்டு சீனாவின் தங்க உற்பத்தி நூறு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அப்போது சீனாவின் தங்க உற்பத்தி அளவு எ‌ன்பது வெறும் 4.07 டன்னாக இருந்தது. இதன் மூலம் தங்க உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் தென் ஆப்‌ரிக்காவை விட தங்க உற்பத்தியில் சீனா உலக அரங்கில் முதல் இடத்தில் உள்ளது.

தங்கத்தை வாங்கும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. 2011 ஆண்டின் நிலவரப்படி இந்தியாவின் தங்க உற்பத்தி 761.05 டன்னாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்