சருமம் அழகாக கண்ணாடி போல பளப்பளப்பாக இருக்க வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், இதெல்லாம் நிறைவேற இந்த இயற்கை பொருட்கள் மூலம் சருமம் அழகாக, பளப்பளப்பாக மின்ன செய்யலாம்.
மாம்பழ ஸ்கரப்: மாம்பழத்தின் காம்பு பகுதியை நீக்கி விடுங்கள். மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள். ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ ப்யூரி, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை, அரை டீஸ்பூன் பால் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை நன்றாக கழுவிய பிறகு, ஈரத்தைத் துடைத்த பின் இதை முகத்தில் பூசி, தேய்க்கவும். கழுத்து, உதடு, கை, கால்களில் கூட ஸ்கரப் செய்யலாம்.
ஆரஞ்சு ஸ்கரப்: பாதி ஆரஞ்சு பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். விதைகளை நீக்கிவிடுங்கள். 4 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து ஸ்கரப் தயாரிக்கவும். வாரத்தில் 3 நாட்கள், இதை வைத்து ஸ்கரப் செய்யலாம்.
இந்த முறைகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது, பளப்பளப்பான சருமம் கிடைக்கும். தோலுக்கு தேவையான சத்துகள் சேரும். சீரான, அழகான சருமமாக மாறும். முகப்பொலிவு கூடும். பருக்கள் வராது.