சருமம் பொலிவு பெற கடலை மாவு, எழுமிச்சை, சந்தனம் சேர்த்து முகத்தில் தடவவும். இதனை வாரம் 2 முறைச் செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்குகளை இரவில் செய்வது நல்லது.
ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்திய பின்பு குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை முகத்தில் சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.இதில் எலுமிச்சை சேர்ப்பது மூலம் அலர்ஜி அல்லது முகவறட்சி ஏற்படுவதாக உணர்பவர்கள் எலுமிச்சைக்குப் பதிலாக தயிர் சேர்த்துக் கொள்ளலாம். ஃபேஸ் பேக்குகளை கழுவிய பின்பு சீரம் அல்லது முகக் கிரீம்களை தடவி விட்டு உறங்க செல்லலாம்.
முகத்தில் உதட்டிற்கு மேல் முடிகள் இருக்கும். இவற்றை நீக்க பச்சைப் பயிறை 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் அரைத்துக் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சந்தனப் பொடி, உலர்த்திய ஆரஞ்சுத் தோலினை பொடியாக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் எலுமிச்சை, ரோஸ் வாட்டர், கருவேப்பிலைப் பொடியையும் சேருங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அதுவாகவே நீங்கிவிடும்.