சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், வெறும் மஞ்சள் மட்டும் பூசாமல், இதனுடன் பால், தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீர் கலந்து உபயோகித்தால் நல்லது.
கஸ்தூரி மஞ்சளை எலுமிச்சை சாறு, முல்தானிமட்டி, வேப்பிலை விழுது, துளசி விழுது, கடலைமாவு, பைத்தம்மாவு, கசக்கசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், தக்காளி என எவற்றோடும் சேர்த்து பயன்படுத்தலாம்.
கஸ்தூரி மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும், பருக்கள் வராது. தொடர்ந்து செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும். பரு, சூடுக்கட்டிகள், காயங்களை குணப்படுத்தும்.
கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.