வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு தேங்காய்ப்பால், ரோஜா இதழ்கள் ரோஸ் வாட்டர், உப்பு ஆகியவற்றை கலந்து அதில் கால்களை முழங்கால் வரை விட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பின்னர் குளிர்ந்த நீர்க்கட்டி கொண்டு பாதத்திலிருந்து முழங்கால் வரை மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்வதால் நாளடைவில் வெடிப்பு நீங்கி பூ போன்ற பாதங்களை பெறலாம்.
அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைபடும் காட்டன் துணியை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கவும்.