மன அழுத்தத்தால் மூளை பாதிப்பு ஏற்படுமா?

வெள்ளி, 3 மார்ச் 2023 (19:49 IST)
இன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம் என்பது அதிக நபர்களுக்கு ஏற்பட்டு வருகிறது என்றும் மன அழுத்தம் காரணமாக மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மூளையில் உள்ள உணர்ச்சிகள் மனநிலை நினைவு ஆற்றல் ஆகியவற்றை மன அழுத்தம் பாதிக்கிறது என்றும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மன கலக்க கோளாறுகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மூளையின் முன் பகுதியில் இருக்கும் பெருமூளை திட்டமிடுதல் முடிவெடுத்தல் ஆகியவை மன அழுத்தம் கொண்டவர்கள் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் மன அழுத்தம் கொண்டவர்கள் மிகவும் பலவீனமாக உணர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சோக உணர்வில் மூழ்கி கிடப்பது, அதிக எரிச்சலுடன் இருப்பது, ஆர்வம் குறைவாக இருப்பது ஆகியவை மன அழுத்தத்திற்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் இந்தியாவில் மட்டும் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. 
 
எனவே மன அழுத்தம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அனுப்பி சிகிச்சை பெற வேண்டும்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்