ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை உடலில் உள்ள பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றி, அழற்சி பிரச்சினைகளை குறைக்க உதவுகின்றன.
மூட்டு வலி, முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு நன்னாரி பயன்படுகிறது. மேலும், இதில் உள்ள சபோனின் தோலில் உள்ள அகநச்சுடன் கலந்து சொரியாசிஸ் நோயை விரைவாக குணமாக்க உதவுகிறது.
நன்னாரி சர்பத் ரத்தம் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதை அதிகம் குடிக்கும்போது சிலருக்கு வயிற்றில் எரிச்சல் ஏற்படலாம். கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பருக வேண்டும். நன்னாரி வேரை நீரில் ஊற வைத்து குடிப்பது இன்னும் சிறந்தது!