பூச்சிவிரட்டிகள் பூச்சியை மட்டுமா விரட்டுகிறது? ஆரோக்கியத்தையும் சேர்த்து அல்லவா!!

வியாழன், 16 மார்ச் 2017 (01:21 IST)
ஈ, கொசு, பூச்சிகளிடம் இருந்து தப்பிக்க இன்றைய காலத்தில் பலர் உபயோகிப்பது பூச்சிவிரட்டி என்ரு கூறப்படும் பலவகை க்ரீம்கள் தான். இந்த க்ரீம்களால் பூச்சிகள் விரட்டப்படுவது உண்மைதான். ஆனால் பூச்சிகளோடு சேர்த்து நமது ஆரோக்கியத்தையும் இந்த பூச்சிவிரட்டிகள் விரட்டி விடுகின்றன என்பது தான் பலருக்கும் புரியாத உண்மை


 


க்ரீம், ஸ்ப்ரே, காயில், மேட், லிக்விட், லோஷன்கள், பேட் போன்ற பலவகைகளில் கிடைக்கும் பூச்சிவிரட்டிகளில் `என்-என்-டைஎத்தில்-மெட்டாகுலமை
டு (டிஇஇடி)’ (N-N-Diethyl-metaculamide -DEET) ஆகிய வேதிப்பொருள்கள் உள்ளன. இந்த வேதிப்பொருட்கள்தான் பூச்சிக் கடியில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ஆனால் இந்த வேதிப்பொருள் நமது உடலுக்கு தோல் உள்பட பலவிதமான அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள்  பூச்சிவிரட்டி க்ரீம்களை கண்டிப்பாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் க்ரீமையோ, லோஷன்களையோ தடவும்போது, சருமம் எதிர்வினைபுரிவதால், இவை கவுன்ட்டர் இரிட்டன்ட்டாக (Counter irritant) மாறிவிடுகின்றன. மேலும் குழந்தைகளுக்கும் கண்டிப்பாக இவைகளை பயன்படுத்த கூடாது. அதுமட்டுமின்றி கர்ப்பிணிகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளும் பூச்சிவிரட்டிகளை தவிர்ப்பது நலம்

கொசுக்களில் இருந்து பாதுகாக்க கொசுவலை எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாத ஒன்று. அதேபோல் மின்சார் பேட் உபயோகிக்கலாம். மேலும் வீட்டிற்கு ரெகுலராக சாம்பிராணி போடுதல், வேப்பிலையை புகைமூட்டம் போடுதல் ஆகியவற்றாலும் கொசு, பூச்சிகளை விரட்டலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்